Poems..




சில நேரங்களில் அவள்

உள்ளங்கையில்
உயிர் வாழ்கிறாய்.
சில நேரம்
அவள் கன்னத்தை வருடுகிறாய்.
அப்புறம்
அவள் உதட்டையே ஒத்திப்
பார்க்கிறாய்.
கடைசியில்
அவள்
இடையில் ஊஞ்சலாடி
ஓய்வெடுக்கிறாய்
கைகுட்டையே...
நீ
குட்டியூண்டு துணி என்றாலும்
கொடுத்து வைத்த துணி

++++++++++++++++++++++++

எட்டாவது சுரத்தை தேடும்
இசைக் கலைஞர்களுக்கு
இன்னும் எட்டவில்லையோ
என்னவளின் மெட்டி சத்தம்?

++++++++++++++++++++++++

மாலை ஐந்து மணிக்கு
சந்திக்கலாம் என்றவுடன்.
வழக்கத்துக்கு மாறாக
கடிகாரம் இன்று
வேகமாக ஓட தொடிங்கியது.

++++++++++++++++++++++++

என் காதலி
நானும் உன் விழிகள் போல்தான்
நீ கண் விழிக்கும் முன் நானும்
விழிக்கிறேன் உன்னை காண ,,,,,


No comments:

Post a Comment